மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்: வேறொரு நாளுக்கு மாற்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மாற்றியமைப்பு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்திற் கொண்டு அரசு பலவகையான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றான உரிமைகள் திட்டமாகும். இத்திட்டத்தின் டிஏபி மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத நபர்களுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக அந்தந்த தாலுக்கா அரசு மருத்துவமனையில் காலை 10.00 மணி முதல் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது .
05.11.2024, 12.11.2024 மற்றும் 29.11.2024 அரசு மருத்துவமனை செய்யாரிலும்,
06.11.2024 மற்றும் 30.11.2024 அரசு மருத்துவமனை சேத்பட்டிலும்,
08.11.2024 மற்றும் 27.11.2024 அரசு மருத்துவமனை ஆரணியிலும்,
13.11.2024 ம ற் று ம் 19.11.2024 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திருவண்ணாமலையிலும்,
15,112024 மற்றும் 26.11.2024 அரசு மருத்துவமனை வந்தவாசியிலும்,
20.11.2024 அரசு மருத்துவமனை வெம்பாக்கத்திலும்,
22.11.2024 அரசு மருத்துவமனை செங்கத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே மேற்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்துக்கொண்டு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த UDID அடையான அட்டை ஆன்லைன் பதிவு மேற்கொண்டு பயனடையுமாறும், மேலும் முன்மிற்கு செல்லும் போது கொண்டு செல்லவேண்டிய ஆவணங்கள் அசல் மற்றும் நகலாக ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-2, ஆகிய ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu