திருவண்ணாமலையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் மண்டல மையம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப் தலைமை வகித்தாா். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் ஆறுமுகம், திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வேலைவாய்ப்பு முகாமில் நோக்கம் தொழில் முனைவராக மாற்றுவது, ஒரு தொழிலை கற்றுக் கொண்டு செய்வது, இளமையிலேயே ஒரு நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ வழி நடத்தி செல்வது வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய செய்தல் என்ற நோக்கில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

படித்த மாணவ-மாணவிகள் வேலை கிடைக்கும் வரை காத்திருப்பேன் என்று கூறாமல் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்ல வேண்டும். அனுபவத்தை கற்றுக்கொள்ளும்போது தொழில் முனைவோராக மாற முடியும். ஒவ்வொரு நீண்ட பயணமும் முதல் அடியில் இருந்துதான் தொடங்குகிறது. அந்த முதல் அடி என்பது சிறிய அடியாகத்தான் இருக்கும்.

மாணவ-மாணவிகளின் எதிா்கால நலன் கருதி போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்துகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு மாணவா்கள் பயன்பெற வேண்டும்

மேலும் விவசாயிகள் பலப்படுத்தும் விதமாக உணவு சார்ந்த துறைகளை வளப்படுத்தும் விதத்தில் புதிய திட்டங்களை தீட்ட வேண்டும். சமுதாயத்திற்கு என்ன தேவைப்படுகிறது எந்த தொழில் நாம் சிறப்பாக செய்யலாம் என பொறுமையாக யோசித்து செயல்பட வேண்டும். சிறந்த தொழில் முனைவராக மாறுவதற்கு பொறுமை மிக அவசியம் தொழில் முனைவராக மாறுவதற்கு பல நிறுவனங்கள் மானியத்துடன் கடன் வழங்குகிறது.

இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 85 முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இவா்கள் தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட நபா்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்க காத்திருக்கின்றன . எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் வேலை வாய்ப்பினை பெற்று தொடர்ந்து பணி புரிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பேசினார்.

முகாமில், 629 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 230 பேர் தோவு செய்யப்பட்டு அவா்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வழங்கினாா். முகாமில், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மோகன்ராஜ் மற்றும் மாணவ-மாணவிகள், தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!