திருவண்ணாமலையில் தேசிய கொடியேற்றி வைத்து ஆட்சியர் முருகேஷ் மரியாதை

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வண்ண பலூன்களை பறக்க விட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ் பி. கார்த்திகேயன்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 191 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது.. அதையொட்டி, காலை கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.. பின்னர், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து காவல் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற துப்பறியும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் போலீசாருக்கு எவ்வாறு பயன் உள்ளதாக பணியாற்றுகின்றன என்பது குறித்தும், காவல் துறையில் மோப்ப நாய்கள் எவ்வாறு செயல்படுகிறது என்றும் செயல் விளக்கம் செய்து காணப்பித்தனர்.
தொடர்ந்து வீட்டுமனை பட்டா, நரிக்குறவர் சான்றிதழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமணம் மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் கடன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சிறு தொழில் கடன் என 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர் முருே, அண்ணாமலையார் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலையாம்பள்ளம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கட்டிடம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்று ஆகியவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சி
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி பொறியாளர் நீலேஸ்வரன், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கமிட்டி
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர தலைவர் வெற்றிச்செல்வன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்டத் துணைத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ,தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம் உறுப்பினர்கள் ஆறுமுகம் சரவணன் சகாதேவன் மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu