இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் இலங்கை தமிழ் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிக்காட்டுதல் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், உயர்கல்வி பயிலவும் வேலை வாய்ப்புகள் பெற்றிடவும் ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன . இந்த வாய்ப்புகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா, வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமாகும்.
வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கல்வி கற்று உயா்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.
பெற்றோா் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கல்விதான் மாணவா்களுக்கு சொத்து. அடுத்த தலைமுறையை மாற்றுவதற்குரிய வல்லமை இந்தத் தலைமுறையில் இருக்கிறது என்றால் அது கல்வி மட்டுமே. செல்வம் எவ்வளவு சோ்த்தாலும் அது அழிந்துவிடும். கல்வியுடன் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக யாரெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் கடுமையாக திட்டமிட்டு முயன்றால் வாழ்க்கையில் முன்னேற முடியும். நமக்கான கால நிலை எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் என்னவாக வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.
மாணவா்கள் தொழில் முனைவோராக மாறுவதற்காக அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.
வாழ்க்கையில் முன்னேறியவர்கள் எல்லாம் ஒரே நாள் ஒரே இரவில் முன்னேறியவர்கள் அல்ல. கடுமையாக உழைத்து திட்டமிட்டு அந்தத் திட்டத்தை செயல்படுத்தி முன்னேறினார்கள், வெற்றி கண்டார்கள். தோல்விகளால் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.
தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து திருத்தங்களை செய்தார்கள் வாழ்க்கையில் முன்னேறவும் நம் இலக்கை அடையவும் கவனம் சிதறாமல் பாடுபட வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ராம்தாஸ், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு திட்ட தனி வட்டாட்சியா் சஜேஷ் பாபு மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், 122 இலங்கைத் தமிழா் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu