தென்பெண்ணை ஆற்றின் நடுவே உயர்மட்ட பாலம்: நேரில் ஆய்வு செய்த அமைச்சர் வேலு

உயர்மட்ட பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு
தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ளநந்தி மலையில் (நந்தி துர்க்கம்)தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி 432 கிமீ தூரம் பயணிக்கிறது. இதில், கர்நாடக மாநிலத்தில் 112 கிமீ தொலைவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் 180 கிமீ தொலைவும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் 34 கிமீ தொலைவும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 106 கிமீ தொலைவுபயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்நிலையில் திருக்கோவிலூர் அருகே தென்பண்ணை ஆற்றின் நடுவே அமைக்கப்படும் உயர்மட்ட பாலப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது கூவனூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் மறுபுறம் உள்ள சாங்கியம் கிராமத்திற்கு மேம்பாலம் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ. வேலு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.19 கோடியே 6 8 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, 8 மாதங்களுக்கு முன்னர் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, விரைந்து பணிகளை முடித்திடவும், மேம்பாலம் அமைக்கும் இடத்தின் அருகில் நில ஆர்ஜிதம் செய்யும்பொழுது விவசாயிகளி ன் ஒத்துழைப்போடு செய்ய வேண்டும் என்றும் அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள்,ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu