திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி சாமி தரிசனம்
X

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட தலைமை நீதிபதி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோயில் சார்பில் அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினார்கள்.

பின்னர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்த தலைமை நீதிபதி அவர்களுக்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமையில் அனைத்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி அவர்கள் மரக்கன்றுகளை நட்டார்.

போளூர் மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் போளூர் பகுதியில் உள்ளவர்கள் சப் கோர்ட்டில் உள்ள வழக்குகளுக்காக ஆரணி செல்லும் நிலை உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது .கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் போளூர் அனைத்து உள்கட்ட அமைப்புகளுடன் கூடிய சப் கோர்ட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும் இன்னும் துவக்கப்படாமல் உள்ளது. மேலும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாறுதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்தப் பதவியும் காலியாகவே உள்ளது.

எனவே உடனடியாக போளூரில் சார்பு நீதிமன்றம் திறக்கவும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்க கோரியும் மனுவினை அளித்தனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Tags

Next Story
scope of ai in future