திருவண்ணாமலை நகரம் முழுவதும் மழை வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை நகரம் முழுவதும் மழை வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் தேங்கிய மழை நீரை பார்வையிடும் கலெக்டர் 

கனமழை காரணமாக திருவண்ணாமலை நகரம் முழுவதும் சாலைகளில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு , கோவிலினுள் நீர் புகுந்தது

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி திருவண்ணாமலை சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உடனடியாக அதை சரி செய்யும் பணிகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில். நகராட்சி நிர்வாகத்தினர் .வருவாய் துறையினர். பேரிடர் மேலாண்மை துறையினர் .காவல்துறையினர் .அடங்கிய குழு மிக விரைவாக செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடுகிறது. கிரிவலப்பாதையில் உள்ள சிவாஞ்சி குளம் நீர் நிரம்பி கோவிலினுள் நீர் புகுந்தது. வேலூர் சாலை, சென்னை சாலை, கள்ளக்குறிச்சி சாலை ,என அனைத்து சாலைகளிலும் நீர் சாலைகளில் வழிந்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகர் முழுவதும் தற்போது அமைச்சர் பார்வையிட்டு இடர்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs