திருவண்ணாமலையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி

‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில், திரளாகக் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நடந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் ஏ எஸ் மீடியா மற்றும் கேபி ஈவன்ஸ். இணைந்து நடத்திய மகிழ்ச்சி வீதி திருவிழா நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கலந்துகொண்டு ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பசுமையை பறைசாற்றும் வகையில் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், பறை இசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் சிலம்பாட்டம், யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டினர்.

அதுமட்டுமின்றி வெஸ்டர்ன் டான்ஸ் மற்றும் பாட்டு கச்சேரிகளும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலெக்டர் முருகேஷ், பேசுகையில், தமிழக முதல்வர் சென்னையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை, கோவை, ஈரோடு என பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி தற்போது சிறப்பாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் தினந்தோறும் என்கிற வாழ்க்கை போன்று நாம் இருக்கிறோம். நம் மனக்கவலை போக்கும் வகையில் உற்சாகமாக இருப்பதற்காகவும் நாம் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் விதமாக இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு மனக்கவலை இன்றி இருக்க வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை வரை நடைபெற்றது

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கவலைகளை மறந்து, தன்னிலை மறந்து ஆட்டம் ஆடி பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகர காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read MoreRead Less
Next Story