/* */

திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம்

Government officials consultation meeting திருவண்ணாமலை அரசு துறை அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் தலைமையில்  அரசு துறை அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Government officials consultation meeting

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நகர் ஊரமைப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் மண்டல திட்டம் தயார் செய்தல் குறித்து ஆலோசனை மற்றும் கருத்து கேட்டல் கூட்டம் நடைபெற்றது.

நகர் ஊரமைப்பு துறையின் மூலமாக தமிழ்நாடு மாநிலத்தை 12 மணி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைத்து 12 ஆயிரத்து 263 கிலோ மீட்டர் பரப்பளப்பிற்கு நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 10 (5) ன் கீழ் இம்மண்டல திட்டத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டு தமிழக ஆளுநர் மூலம் 12 மண்டல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில் 8 மண்டல திட்டங்களுக்காக 98 ஆயிரத்து 13 சதுர கிலோமீட்டருக்கு நிதியானது ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு வெளிப்படை தன்மை சட்டம் 1998 கீழ் மண்டல திட்டங்களான வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி திட்டங்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வேலூர் மண்டல திட்டத்திற்கு தமிழ்நாடு வெளிப்படை தன்மை சட்டம் 1998 இல் பிளானிங் மற்றும் ஆர்க்கிடெக் புதுடெல்லி என்ற மத்திய நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்தமானது நகர ஊரமைப்பு துறை சென்னை மூலமாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்திற்கு தொடர்புடைய தரவு சேகரிக்க முதன்மை களப்பணி மற்றும் இத்திட்டத்திற்கு தொடர்புடைய பங்களிப்பாளர்களின் கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து , பல்வேறு துறைகளான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 28 அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு பங்களிப்பாளர்களின் ஆலோசனை மற்றும் கருத்து கேட்டல் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி கூட்டமானது நகர் ஊரமைப்பு துறையின் மூலமாக உதவி இயக்குனர் பவித்ரா மற்றும் நகர் ஊரமைப்பு துறை அலுவலர்களைக் கொண்டு கருத்து கேட்டல் கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறையைச் சார்ந்த முக்கிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Feb 2024 6:26 AM GMT

Related News

Latest News

 1. பட்டுக்கோட்டை
  குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
 2. ஈரோடு
  அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
 3. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 4. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 5. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 6. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 7. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 8. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 9. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 10. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!