திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்: நாளை மாலை துவக்கம்
மாடவிதி, கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்.
Girivalam Tiruvannamalai -திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை 9 ஆம் தேதி மாலை 6.22 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் 10 ஆம் தேதி மாலை 4.35, மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளுதல் குறித்து கிரிவலைப்பாதை மாட வீதிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu