திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா
X

திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் உருவ படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட தியாகி அழகுமுத்துக்கோனின் 265வது குருபூஜை விழா இன்று காலை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 265வது குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன்,மாவட்டத் துணை அமைப்பாளர் விஜயராஜ் , மாவட்ட அமைப்பாளர் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஏ. ஏ. ஆறுமுகம்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture