போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி: பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி: பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X
போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே, வங்கி, டி.ஆர்.பி. ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திட ஏதுவாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதனால் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்துகொண்டு பயன் அடைய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-வது மாடியில் உள்ள பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி