தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
பைல் படம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 16-ந் தேதி தொடங்குகிறது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை போன்ற 621-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட்டப்படிப்பு முடித்து 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட வேலைநாடுநர்கள் இந்த தேர்வு எழுதலாம். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு, உடல்திறன் போட்டிகளுக்கு மொத்த காலிப்பணியிட எண்ணிக்கையில் விகிதாசாரப்படி விண்ணப்பதார்கள் அழைக்கப்படுவார்கள்.
இந்த தேர்விற்கு வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்கள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் 04175- 233381 என்ற தொலைபேசி எண்ணில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.
என மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu