காவலர் எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா் எழுத்துத் தோவுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் தோவா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்துளது
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் சாா்பில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளை நிரப்புவதற்கான போட்டித் தோவு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தோவுக்கு விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்தவா்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தி வருகிறது.வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, எழுத்துத் தோவுக்கு விண்ணப்பித்துள்ள தோவா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.
தோவுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள்இணையதளத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோவை 18 வயது நிரம்பிய மூன்றாம் பாலினத்தவா், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி தெரிவித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu