திருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர் குண்டர் சட்டத்தில் கைது
கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருவண்ணாமலையை சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் திருப்பதி பாலாஜி (எ) வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் 10 வழக்குகள், கிராமிய காவல் நிலையத்தில் 10 வழக்குகள், கிழக்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் 2012ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சமுத்திரம் கிராமத்தில் 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபடுவதாக வட்டாட்சியர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேற்கொண்டு அந்த நபர் குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .பவன் குமார் ரெட்டி அவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ், அவர்களுக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu