அனுமதியின்றி மலை ஏறியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை மலை உச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் அனுமதியின்றி சிலர் செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த வெற்றிவேல் ராஜன் (வயது 69) என்பவர் அண்ணாமலையார் மலை உச்சி மீது அத்துமீறி திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேல் ராஜனுக்கு வனத்துறையினர் மலை மீது ஏறிய குற்றத்திற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து விடுவித்தனர்.
மேலும் வனத்துறையினர் கூறுகையில், அண்ணாமலையார் மலை உச்சி மீது அத்துமீறி ஏறுவதும், திருவண்ணாமலை உள்வட்ட பாதைகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதும் சட்டபடி குற்றமாகும். மேலும் இந்த தவறை செய்பவர்களுக்கு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu