விளம்பர பலகை விழுந்து இறந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு

திருவண்ணாமலையில் விளம்பர பலகை விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விளம்பர பலகை விழுந்து இறந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு
X

மதுரை ஐகோர்ட்டு  (பைல் படம்).

திருவண்ணாமலையில் விளம்பரப்பலகை விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்த என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த சுவாமிஜி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் அங்கப்பன் என்ற விக்னேஷ், என்ஜினீயரிங் படித்து வந்தார்.

14.5.2014 அன்று பவுர்ணமியையொட்டி, அவர் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றார். இரவு 10.45 மணி அளவில் கிரிவலப்பாதையில் இருந்த விளம்பர பலகை திடீரென விக்னேஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு இரும்புத்தூணை பிடித்ததில், மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது இறப்புக்கு அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவும் காரணம். எனவே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

திருவண்ணாமலை ஒரு புகழ் பெற்ற யாத்திரை தலம். இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது நகராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால் கிரிவலப்பாதையில் இருந்த விளம்பரப்பலகை விழுந்ததால்தான் மனுதாரர் மகன் காயம் அடைந்தார்.

பின்னர் மருத்துவ முகாமில் இரும்புத்தூணில் மின்சார கசிவு இருந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும்தான் பொறுப்பு. எனவே இவர்கள்தான் மனுதாரர் மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்க பொறுப்புடையவர்கள்.

மனுதாரர் மகன் விக்னேஷ், பள்ளிப்படிப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று, கல்லூரியிலும் சிறந்த மாணவனாக இருந்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும்.

எனவே அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத்தொகையை 4 வாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் உரிய தொகையை செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 25 Sep 2023 11:43 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
 2. சேலம்
  சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
 3. சினிமா
  பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
 4. தமிழ்நாடு
  வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
 5. சிவகாசி
  சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
 6. சினிமா
  சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
 7. தமிழ்நாடு
  வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
 8. சோழவந்தான்
  சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி
 9. குமாரபாளையம்
  பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
 10. ஈரோடு
  விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது