திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
X

முக்கிய ஆவணங்கள், பொருட்கள் தீயில் கருகியது.

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் எரிந்து சேதம்.

இந்தியா முழுவதும் வீடு கட்டும் கடன் வழங்கும் திட்டங்கள் கொண்ட நிறுவனங்களில் மகேந்திரா நிதி நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் மாடியில் மகேந்திரா வீடு கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது.

நேற்று காலை மணியளவில் மகேந்திரா வீடு கடன் வழங்கும் நிறுவனத்திலிருந்து புகை வந்துள்ளது. அப்போது பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பைனான்ஸ் நிறுவனத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியாக தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கும், கீழ்தளத்தில் இருந்த இந்தியன் வங்கிக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது

தீ விபத்தில் வீட்டு பத்திரங்கள், வாடிக்கையாளர்களின் கடன் பெற்ற விவரம், தவணை கட்டிய ரசீது மற்றும் கணினி, மேசை நாற்காலி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself