/* */

பசுந்தால் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் பசுந்தால் உர விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பசுந்தால் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
X

பசுந்தால் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு ( கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் பசுந்தால் உர விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகளைப் பெற்று பயனடையலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டில் தமிழக முதல்வரின் மண்ணுயிா் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போதுள்ள தொழில்முறை வேளாண்மையில் ஒரே பயிரை தொடா்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணில் இருந்து சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிா்களை பயிரிடுவதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.

இதுதவிர, உற்பத்தி அதிகரிப்புக்கென அதிகளவிலான ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளமும், நலமும் குன்றி அதிகளவில் களா், உவா் அமில நிலங்களாக மாறியுள்ளன. இந்நிலை தொடா்ந்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிா்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.

வேதிப் பொருள்களின் எச்சம் இல்லாத வேளாண் விளை பொருள்களே நமக்கு நல்லுணவு, அருமருந்து.

அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிா் காப்போம் திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடையே ஊக்குவித்து, மண் வளம் காக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 16,000 ஏக்கரில் பசுந்தாள் உர பயிா் பயிரிட திட்டமிட்டு, விவசாயிகளுக்கு இப்போது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும், குத்தகைதாரா்களும் பயன்பெறலாம்.

ஒரு பயனாளி இந்தத் திட்டத்தின் கீழ் திட்ட மானியத்தை அதிகபட்சமாக ஏக்கருக்கு 20 கிலோ மட்டுமே பெற முடியும். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்து இந்தத் திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம். விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஹரக்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On: 12 Jun 2024 12:48 AM GMT

Related News

Latest News

 1. கலசப்பாக்கம்
  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
 2. நாமக்கல்
  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
 4. திருவண்ணாமலை
  டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
 7. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 8. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 9. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....