தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை கவ்விய முதலை

தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை கவ்விய முதலை
X

பைல் படம்

தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விவசாயியை முதலை இழுத்து சென்றதில் காயமடைந்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 100 டிகிரி வரை வெயிலில் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று, தொடர்ந்து லேசான சாரவ் மழை பெய்ய தொடங்கியது

அதன் பிறகு பரவலாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதில் அதிகபட்சமாக தண்டராம்பட்டு பகுதியில் 52.60 மில்லி மீட்டர், வெம்பாக்கம் 33 மில்லி மீட்டர், செய்யார் 13 மில்லி மீட்டர், வந்தவாசி 12 மில்லி மீட்டர், திருவண்ணாமலை ,கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் 8 மில்லி மீட்டர், ஆரணி 5 மில்லி மீட்டர், போளூர் 4.40 மில்லி மீட்டர், ஜமுனாமுத்தூர் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 138 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மழை பெய்யததால் பொதுமக்கள, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது முதலை இழுத்து சென்றதால் விவசாயி காயமடைந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் , விவசாயி. இவரது மனைவி செங்கவல்லி. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

வெங்கடேசன் அவ்வப்போது அருகில் உள்ள தென் பெண்ணையாற்று பகுதிக்கு சென்று மீன்களை பிடித்து வந்து வியாபாரம் செய்வது வழக்கம். அதன்படி இன்று வழக்கம்போல் மீன் பிடிக்க வெங்கடேசன் தென்பெண்ணை யாற்றுக்கு வலையுடன் சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரை முதலை ஒன்று கவ்வியது. இதனால் வெங்கடேசன் நிலைதடுமாறி விழுந்தார். அவரின் வயிற்றுப்பகுதியை முதலை கவ்வி ஆற்றுக்குள் இழுத்துச்செல்ல முயன்றது. வெங்கடேசனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் சென்று ஆற்றில் இறங்கி, முதலையின் பிடியில் இருந்து வெங்கடேசனை மீட்டனா்.

பின்னர் படுகாயமடைந்த அடைந்த அவரை தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!