ஊதிய உயர்வு கோரிக்கை: மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரிக்கை:  மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைவர் மாறன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் அருண்பிரசாத் வரவேற்றார். கோரிக்கையை வலியுறுத்தி மாநிலச் செயலாளர் பஞ்சமூர்த்தி பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பகுதி நேர சுகாதார பணியாளர்கள் இல்லாத பிரிவு அலுவலகங்களுக்கு பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் அம்பிகா நன்றி கூறினார்.

Tags

Next Story