/* */

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்

திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
X

மாணவர்களுடன் மாராத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து, மாணவிகளுடன் சேர்ந்து ஓட்டத்தில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி, சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இருந்து 300- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை-வேலூா் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்த ஒட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், மாவட்ட விளையாட்டு அலுவலா் நோய்லின் ஜான், மாவட்ட திட்ட அலுவலர்கள் வட்டாட்சியர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர் மற்றும் பணியாளர்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2024 12:47 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 2. நாமக்கல்
  தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
 3. நாமக்கல்
  நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
 4. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 5. ஆரணி
  ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
 6. திருவண்ணாமலை
  மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
 8. திருவண்ணாமலை
  12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
 10. லைஃப்ஸ்டைல்
  முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?