திருவண்ணாமலை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்க தேர் இழுத்த முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு அதிமுக நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70- வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி உள்ள பால விநாயகர் கோவிலில் அபிஷேகம் 108 தேங்காய் உடைத்தல் இனிப்பு வழங்கியும் பின்னர் மார்க்கெட் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மார்க்கெட் வளாகப் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்குர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில எம்ஜிஆர் மன்றத் துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், அவைத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கழக நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக ஆரணி சட்டமன்றத் தொகுதி , ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மற்றும் ஒன்றிய செயலாளர் திருமால், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தில் , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70- வது பிறந்தநாளை முன்னிட்டு கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்க தேர் இழுக்கபட்டது.
இந்நிகழ்வில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில். மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், கழக நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
போளூர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 70-வது பிறந்தநாளையொட்டி
வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அமைந்துள்ள சிவசக்தி குழந்தைகள் ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலந்துகொண்டு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணி வர்மா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu