/* */

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்

HIGHLIGHTS

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
X

சுவாமி தரிசனத்திற்கு அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலின்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்களுக்கு அவர் நீர் மோர் வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அண்ணாமலையார் மீது அதிக பக்தி கொண்டவர், திருவண்ணாமலைக்கு வரும்போது எல்லாம் அண்ணாமலையார் கோவிலுக்கு செல்வது வழக்கம் .

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஆரணி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்தார். அவருடன் திருவண்ணாமலைக்கு துர்கா ஸ்டாலினும் வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று மாலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை வணங்கி வழிபட்டார். முன்னதாக சம்பந்த விநாயகர் சன்னதி, நவகிரக சன்னதி, கால பைரவர் உள்ளிட்ட சந்ததிகளை வணங்கி வழிபட்டார்.

பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு துர்கா ஸ்டாலின் நீர் மோர் வழங்கினார்.

முன்னதாக திருக்கோயில் சிவாச்சாரியார்கள், கோயில் அலுவலர்கள் துர்கா ஸ்டாலினுக்கு கோயில் சார்பாக பிரசாதங்களை வழங்கினார்கள்.

Updated On: 4 April 2024 3:31 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
 3. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 4. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 5. குமாரபாளையம்
  ஈரோடு நாடாளுமன்ற தொகுதி குமாரபாளையத்தில் 74.06 சதம் ஓட்டுப்பதிவு
 6. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 7. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 8. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 10. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!