திருவண்ணாமலை மாவட்ட திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை மாவட்ட திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், அம்பேத்குமாா், ஜோதி, கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நரேஷ்குமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:

ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசு கடந்த 2 ஆண்டுகளில் 1000 கோயில்களுக்கு குடமுழக்கு நடத்தி உள்ளது. நாங்கள் ஆன்மிகத்துக்கு எதிரனவா்கள் அல்லா். திருவண்ணாமலை தேரோடும் வீதியை சிமென்ட் சாலையாக மாற்றுவோம் என்று வாக்குறுதியாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா். திருப்பதியை விஞ்சும் அளவில் இங்கே சிமென்ட் சாலைப் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அய்யங்குளம் தூா் வாரப்படுகிறது. அனைத்து சாதியினரும் அா்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் ஆசை. அதைத்தாண்டி, பெண்களையும் அா்ச்சகராக்கியதுதான் சமூக நீதி, புரட்சி. முதல்வா் ஸ்டாலின் அந்தப் புரட்சியை செய்து இருக்கிறாா்

பெரியார் திடலில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், சனாதனம் அழிக்கப்பட, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்றார். இது அவருடை சொந்த கருத்தல்ல. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசிய கருத்து. கழகத்தின் கருத்து. அதைத்தான் உதயநிதிஸ்டாலின் பேசினார். உதயநிதிஸ்டாலின் இந்துக்களை ஒழிக்க வேண்டும், கடவுளை ஒழிக்க வேண்டும் என்று பேசினார் என்று எதிர்க்கட்சியினர் திரித்து பேசுகிறார்கள். திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்கமுடியாது.

இதை எல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல்களில் 40 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். விவசாய அணி சார்பாக கலெக்டர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். கட்டணமில்லா பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிற புதுமைப்பெண் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட அரசின் சாதனைகளை மகளிர் அணியும், மகளிர் தொண்டரணியும் மக்களிடத்திலே சென்று பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அணியும் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

மருத்துவா் அணி ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூா், கிளைக் கழகங்களில் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்த வேண்டும். இதற்காக எனது குடும்பத்துக்குச் சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் .

கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, ஆலோசனைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், , மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன் மற்றும் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. சென்னை
    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
  3. அரசியல்
    தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
  4. தொழில்நுட்பம்
    சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்
  5. மதுரை மாநகர்
    ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை...
  6. தொழில்நுட்பம்
    ஒன்பிளஸ் 12 இந்தியாவில் எப்ப ரிலீஸ் ஆகுது தெரியுமா?
  7. ஆம்பூர்
    ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
  8. திண்டுக்கல்
    திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு போராட்டம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி...
  10. ஈரோடு
    கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது