திருவண்ணாமலையில் கோ - ஆப்டெக்ஸின் தீபாவளி 2024 விற்பனை துவக்க விழா
கோ - ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனையை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் நடத்தும் கோ - ஆப்டெக்ஸின் தீபாவளி 2024 விற்பனை துவக்க விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவிக்கையில், கோ -ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935 - ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸ், பூர்த்தி செய்து வருகிறது .
திருவண்ணாமலை சென்ற ஆண்டு தீபாவளியில் சுமார் ரூபாய் 92.36 இலட்சம் அளவிற்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பும் அளித்து வருகிறது. இந்த வருட தீபாவளி 2024-க்கு ரூபாய் 1.35 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உக்திகளை கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி இரகசேலைகள் புதிய வடிவமைப்பில் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பருத்தி சேலைகள், லுங்கிகள், போர்வைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள் ரெடிமேட்சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது.
இவ்வாண்டு புதிய இரக வரவுகளாக, வில் வீவ் ஆயத்த சட்டைகள், ஸ்லப் காட்டன்சட்டைகள், டிசைனா காட்டன்சேலைகள் என பல புதிய இரகங்கள் விற்பனைக்கு உள்ளன. கோ -ஆப்டெ க் ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி இரங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட்ஸ்கிரின் துணிகள் தலையனை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோ- ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 56% கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோ ஆப்டெக்ஸ் மாதந்திர சேமிப்புத் திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது www.cooptex.gov. in என்ற இணைய தளத்தின் மூலமும் ஆனலைன் விற்பனையை செய்து வருகிறது.
அரசு ஊழியர்கள் கடன் விற்பனை வசதிகளை பயன்படுத்தி தங்களது குடும்பத்திற்கு தேவையான துணி இரகங்களை கோ ஆப்டெக்ஸ்ல் வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் மேலும் அனைவரும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் கார்த்திகேயன், கோ அப் டெக்ஸ் மேலாளர் ஞானபிரகாசம், தனபால், ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu