/* */

திருவண்ணாமலையில் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண், விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடைப் பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கின்றனா். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செங்கம் தாலுகா தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மானாவரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் செய்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகள், பெண் விவசாயிகள், பட்டியல் இன மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2½ ஏக்கர் நிலமும் அதில் மரவள்ளி முதன்மை பயிராகவும், ஊடு பயிர் வகைகளும் மற்றும் தீவனப்பயிர்களும் பயிரிட வேண்டும். 1 மாடு, 5 ஆடுகள் வாங்க வேண்டும்,

தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் செய்திட வேண்டும். இதற்கான தொகை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற விதை குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்

விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள். விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது.

தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் ரகங்கள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விவசாயிகள் தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்புத்திறனில் குறைபாடுகளோ இருந்தால் அது தொடர்பாக 9786259111 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!