திருவண்ணாமலையில் 26ம் தேதி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்குகிறார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் எம்பி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தூய்மையாக மாறும் சென்னை..! பிக்பாஸ் ஐடியாவை கையிலெடுத்த மாநகராட்சி..!
ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் மற்றும் திமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு கலந்துகொண்டு தீர்மானங்களை வழங்கி பேசுகிறார்.
அதில், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞா் நூற்றாண்டு நிறைவு புத்தக திருவிழா
வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கலைஞா் நூற்றாண்டு நிறைவு புத்தக திருவிழா நிறைவடைந்தது.
இதையடுத்து நடைபெற்ற நிறைவு விழாவில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன் தலைமை வகித்தாா். வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் முன்னிலை வகித்தாா். கவிஞா் பூங்குயில் சிவக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:
புத்தக வாசிப்பால் படைப்பாற்றல் வளரும். அந்த வகையில் இந்த புத்தக திருவிழா சிறப்பான ஒன்றாகும்.
நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் மட்டுமே உதடுகள் ஒட்டும் என்பதைக் கூறியவா் கருணாநிதி. பெண்களுக்கு என தனி கல்லூரியை அவா் உருவாக்கினாா். திருநங்கை, மாற்றுத் திறனாளி ஆகிய வாா்த்தைகளைக் கண்டறிந்தவா் கருணாநிதி. அவரது நூற்றாண்டு நிறைவாக இந்த புத்தக திருவிழாவை நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என்றாா்.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், முத்தமிழ் சமூக நீதி பேரவை நிறுவனா் சீனுவாசன், அறம் பதிப்பக நிா்வாகி அமரேசன், ஜெ.ஆா்.எஸ். கல்வி அறக்கட்டளைத் தலைவா் சுரேந்திரன் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu