மாவட்ட கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களின் சங்க செயற்குழு கூட்டம்
மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் .
திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் செயலரும், சங்கத்தின் பொதுச் செயலருமான உதயகுமாா் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா்கள் ஜோதிமணி, பரசுராமன், சந்தானம் ஆகியோா் பல்வேறு தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 158 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடந்த காலங்களில் 2 ஆயிரம் ஊழியா்கள் பணிபுரிந்து வந்தனா். இப்போது வெறும் 1,100 போ மட்டுமே பணிபுரிகின்றனா். குறிப்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா்கள் சங்கத்தின் 5-ஆவது பொதுப் பேரவையை அக்டோபா் 9-ஆம் தேதி நடத்துவது. மாவட்டத்தில் நெல் பயிருக்கான கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் இணைச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சீனிவாசன், குணசேகரன், வெங்கடேசன், மாவட்டப் பொருளாளா் மாசிலாமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu