தரமற்ற உணவு விற்றால் குண்டாஸ்: ஓட்டல்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. உடல் நலம் பாதித்த பலரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் லோஷனி என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட அந்த உணவகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. உணவக உரிமையாளர் மற்றும் சமையலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உணவு மாதிரிகளை கைப்பற்றி, சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டு உள்ளது.
மேலும், இதன் முடிவுகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆரணி பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்கள் அனைத்தையும் உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் குழுக்கள் அமைத்து, உரிய கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உணவகங்களில் தவறு நடைபெற்றது என்று நிருபிக்கப்பட்டால், கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு தயாரிப்பாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu