பழங்குடியினருக்கு எஸ் டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று, நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை வட்டம் தென்மாத்தூர் ஊராட்சியில் மாவட்ட நி ர்வாக ம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்று முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் வங்கியின் மூலம் கடனுதவி வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் மந்தாகினி முன்னிலை வகிக்க மாவட்டபழங்குடியின நல திட்ட அலுவலர் கலைச்செல்வி அனைவரையும்வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
பழங்குடியின மக்களுக்குத் தேவையான ஜாதி சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆதார் அடையாள அட்டை, நிலப் பட்டா, வங்கிகளில் கணக்குகள் தொடங்குதல், ஊரக வேலைத் திட்ட பணி ஆணை வழங்குதல் போன்ற அரசுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதுபோன்ற முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் நேரடியாக அந்தந்தப் பகுதியில் இயங்கும் பள்ளிக்குச் சென்று ஜாதி சான்றிதழ் பெறாத மாணவா்களின் பட்டியலைப் பெற்று, அவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனா்.
திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தில் பழங்குடியினா் வாழும் 4 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திட்டங்களை பழங்குடியினா் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.
இந்த முகாமில் கலந்து கொண்ட பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைபெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முகாமிலேயே பழங்குடியினருக்கு எஸ். டி. சாதிச்சான்றிதழ், ஆதார் திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா கறவை மாடு மற்றும் ஆட்டுக்கடன், சிறுகுறு கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முகாமில் மண்டல துணை தாசில்தார் மஞ்சுநாதன், வருவாய் ஆய்வாளர் சுதா , கிராம நிர்வாக அலுவலர்கள் மாதவன் ஜெயக்குமார் மாரிசெல்வி ,ராஜ்கமல், பூங்கொடி ,வெங்கடாஜலம் ,ஒன்றியக்குழு உறுப்பினர் அம்சாகண்ணன் ,ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம்மாள் உள்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் தியாகராஜன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu