கிரிவலப் பாதையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிரிவலப் பாதையில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆய்வின்போது ஆட்சியர் மற்றும் எஸ் பி

கிரிவல முன்னேற்பாடு பணிகள் குறித்து கிரிவலப்பாதையில் ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல முன்னேற்பாடு பணிகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையி ல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

"மலையே மகேசன்" என போற்றப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

திருவண்ணாமலை கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட மலையை பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி இன்று 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகின்றது. 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகின்றது. மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் ஆட்சியர் முருகேசன் ஆய்வு செய்தார்.அப்போது கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவச தரிசனம் செய்ய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியாற்ற வேண்டும். மேலும் போலீசார் எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நகரத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகமான தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.அன்னதானம் நடைபெறும் இடம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future