திருவண்ணாமலையில் சமுதாய வளைகாப்பு விழா
திருவண்ணாமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி
ஒவ்வொரு ஆண்டும் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சாதி மத வேறுபாட்டை கடந்து வளைகாப்பு விழா நடைபெற்றது. இதனை பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி தலைமையேற்று வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 3500 கர்ப்பணி பெண்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியின் முதலாவதாக சமுதாய வளைகாப்பில் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு, குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதனை கர்ப்பிணி பெண்கள் மனமகிழ்வுடன் பெற்றுச் சென்றனர்.
தொடர்ந்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு காலங்களில் சாப்பிடக்கூடிய சத்தான உணவு கண்காட்சியை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பார்வையிட்டோர்.
இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை , குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu