பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
X

பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில், நடைபெற்ற  கண்டன ஆா்ப்பாட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத் தலைவா் வழக்கறிஞர் சங்கா் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவட்டத் தலைவா்கள் செல்வராஜ், முருகன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் விக்னேஷ் வரவேற்றாா். சிதம்பர சோனாசல சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ரூ.2 கோடியே 50 லட்சத்தில் அக்னிகுளத்தை தூர்வாரி பேரூர் ஆதீன ஆதிகுரு சிவபிரகாசரக்கு தினமும் பூஜை செய்து வந்த சிதம்பர சோனாசல சுவாமிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதைக் கண்டித்து இதில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனா் .

இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் , மாவட்டச் செயலா்கள் , திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் காண்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட பாஜக ஆன்மிகப் பிரிவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விசுவ இந்து பரிஷத் சார்பில் புகார் மனு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் நடத்திய சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பேசினார்.

இந்த மாநாட்டில் சனாதனம் ஒழிப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் இந்து அமைப்பினர் அவர் மீது போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஏழுமலை புகார் மனு அளித்துள்ளார்.

அதில் "டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்றவற்றை நாம் எதிர்க்க முடியாது, அவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல், சனாதனத்தை (சனாதன தர்மத்தை) எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.

சனாதான தர்மத்தில் சாதி பாகுபாடுகள் எங்கும் முன் நிறுத்தப்படவில்லை. உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று எங்கும் சொல்லப்படவில்லை. சமூகத்தில் நேர்மையையும் தர்மத்தையும் நிலை நிறுத்தி காலத்தால் அழிக்க முடியாத வாழ்வியலாக உள்ளது.

சனாதான தர்மத்தை உயர்வாக நாங்கள் நம்புகிறவர்கள், அதை கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்துக்களின் மீது வெறுப்பை உமிழ்வதாக அமைந்துள்ளது. அவரது பேச்சு எங்களை மிகவும் பாதித்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

எனவே உதயநிதி ஸ்டாலின் மீதான இந்த புகாரை பெற்றுக் கொண்டு அவர் மீது தகுந்த பிரிவுகளின் படி வழக்கை பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கூறியிருக்கிறார்.

அப்போது மாவட்ட தலைவர் மணிகண்டன். அம்மணி அம்மன் கோயில் நிர்வாகி ரமேஷ். ராஜேந்திரன். பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார். மற்றும் நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா