/* */

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு
X

பைல் படம்.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட வழி வகை செய்யப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம்.

மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 May 2023 12:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்