/* */

தீபத் திருவிழா: கைலாச வாகனத்தில் அருணாசலேஸ்வரர் வீதி உலா

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 9-வது நாளான நேற்று கைலாச வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

HIGHLIGHTS

தீபத் திருவிழா: கைலாச வாகனத்தில் அருணாசலேஸ்வரர் வீதி உலா
X

கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 9-வது நாளான நேற்று சனிக்கிழமை காலை, புருஷா மிருகம் வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா இரவு கைலாச வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

அதன்படி, தீபத் திருவிழாவின் 9-ஆவது நாளான நேற்று காலை மூஷிக வாகனத்தில் உற்சவா் விநாயகா், புருஷா மிருகம் வாகனத்தில் உற்சவா் சந்திரசேகரா் வீதியுலா வந்தனா்.

இரவு 10.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மன், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த உற்சவா் சுவாமிகளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இன்று தீபத் திருவிழாவின் நிறைவு நாள் விழாவான கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இன்று அதி காலை நான்கு முப்பது மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது . அதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது . அப்போது அர்த்தநாரீஸ்வரர் சில நிமிடங்கள் மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் கொடிமரம் அருகே வந்து காட்சியளிப்பார். இதைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் அருணாச்சலேஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Updated On: 26 Nov 2023 1:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?