திருவண்ணாமலையில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை முகாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 6 வைத்து கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை நடைபெறும் ஆறாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறும் தினத்தன்று அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்புடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்கிற நிலையை அடைய உதவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி