அண்ணாமலையார் கோவிலில் 3 நாளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

அண்ணாமலையார் கோவிலில் 3 நாளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரத்திற்கு வெளியிலிருந்து வழிபட்டுச் சென்றனர்.

மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திங்கள் முதல் வியாழன் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக, காலை 5 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கொரோனா கட்டுப்பாடுகளால், வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

இந்த நடைமுறை தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரத்திற்கு வெளியிலிருந்து சாமியை வழிபட்டுச் சென்றனர். அதேபோல் ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் உள்ளிட்டவற்றிலும், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future