நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

நேரடி நெல் கொள்முதல் மையம் அமைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021- 22 ம் ஆண்டு சம்பா பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் மையம் அமைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாகவும் , வேளாண்மை இணை இயக்குனரால் தெரிவிக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை வருவாய் கோட்டாட்சியர் மூலம் ஆய்வு மேற்கொள்ளவும், அரிசி ஆலைகள் நெல் அரவை துரிதப்படுத்தவும் ,சம்பா பருவத்துக்கு இணையவழி மூலம் கொள்முதல் செய்தல் தொடர்பாகவும், விவசாய பிரதிநிதி மற்றும் உறுப்பினர்கள் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களி ன் விபரங்களை வழங்குதல் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ பிரியதர்ஷினி ,வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,கூட்டுறவு இணை பதிவாளர் ராஜ்குமார், நேரடி நெல் கொள்முதல் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், சக்கரவர்த்தி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu