வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
X
வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணப்படுவது குறித்தும் வேட்பாளர்களின் முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சந்திப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் அகிலா தேவி உதவி பயிற்சி ஆட்சியர் கட்டா ரவி தேஜா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!