மாற்றுத்திறனாளிகள் முகாமில் மதிய உணவு வழங்கி சாப்பிட்ட ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் முகாமில் மதிய உணவு சாப்பிட்ட ஆட்சியர்
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாற்று திறனாளிகள் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவினை வழங்கி அவர்களுடன் மதிய உணவினை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சாப்பிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திறனாளிகளின் நல அலுவலகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவி திட்டத்தின் 18 மாற்று திறனாளி மணமக்களுக்கு ஒரு பவுன் தங்க நாணயத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஒரு மாற்றுத்திறனாளி நபருக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்பில் மின்களம் பொருந்திய சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமின் போது ஒரு மாற்றுப் திறனாளி வழங்கிய மனுவின் மீது உடனடி தீர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 9800 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வேண்டி 312 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 182 தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேருந்து பயண அட்டை 22 மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ரயில் பயண சலுகை அட்டை 17 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது .முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மூன்று மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வங்கி கடன் வேண்டி விண்ணப்பித்த 8 மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 7 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி நான்கு நபர்களும் மாதாந்திர உதவித் தொகை வேண்டி 12 நபர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு அளித்த ஆட்சியர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசதியாக அமருவதற்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து மருத்துவ முகாம் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று உணவினை வழங்கி அவர்களுடனே அமர்ந்து உணவு உட்கொண்டார். இதனால் மாற்றுத்திறனாளிகள், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu