திருவண்ணாமலை மாவட்ட முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

முதியோர்களிடம் நலம் விசாரித்த கலெக்டர் முருகேஷ்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா மேக்கலூர் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் மனநலம் குன்றியோர் இல்லத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்குள்ள முதியோர்களிடம் நலம் விசாரித்தார் பின்னர் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவம் உணவு முறையாக வழங்கப்படுகின்றனவா என்பதையும் கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் மாவட்ட கலெக்டரை இன்முகத்தோடு வரவேற்று அன்பாக பேசினர். முதியோர் இல்ல ஆய்வு முடிந்த பின்னர் அதே பகுதியில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கான இல்லத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார் .
அங்கு வசிக்கும் மனநலம் குன்றியவர்களிடம் கலந்துரையாடினார் மற்றும் அவர்களுடைய இருப்பிட வசதி பாதுகாப்பு மருத்துவ வசதி போன்றவற்றை அங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான போர்வைகள் மற்றும் ஊன்று கோலை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
அதேபோல் சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு மறுவாழ்வு சங்கத்தில் இயங்கி வரும் பள்ளியில் காது கேளாதோர் மாணவர்கள் 189 பேர் உள்ளனர். அதில் 143 நபர்கள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். மீதமுள்ள 46 மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். காதுகேளாத இளம் சிறார்கள் 18 போ், அறிவுத்திறன் குறையுடையோர் 89 பேர், புறஉலகு சிந்தனையற்றோர் 6 பேர் என மொத்தம் 302 மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி முறை, கல்வி, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் சென்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகரில் இயங்கி வரும் தாய் உள்ளம் என்ற முதியோர் இல்லத்தினை அவர் பார்வையிட்டார். அந்த இல்லத்தில் ஆண்கள் 24 பேரும், பெண்கள் 35 பேரும் என மொத்தம் 59 பேர்உள்ளனர். இந்த இல்லத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், கழிவறை, தங்கும் இடம், சுற்றுச்சூழல் உள்ளதா என ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் சப் ஜான் மற்றும் சமூக நலத்துறை வருவாய்த்துறை ஊழியர்கள் காவல்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu