வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
X

வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்  பார்வையிட்டார். 

திருவண்ணாமலையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்பு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கட்டா ரவிதேஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு ) ஆசைத்தம்பி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விளம்பரம் , ராம்பிரசாத் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture