சர்வதேச முதியோர் தின விழா: முதியோர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர்

சர்வதேச முதியோர் தின விழா: முதியோர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர்
X

முதியோர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர் முருகேஷ்

சர்வதேச முதியோர் தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் முதியோர்களிடம் கலந்துரையாடினார்.

திருவண்ணாமலை கிரேஸ் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் 1.10.2021 அன்று நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கலந்து கொண்டார் .

அப்போது முதியோர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார். பின்பு முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் மற்றும் சமூக நலத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!