கல்வி கடன் பெறுகின்ற மாணவர்கள் கடனை தவறாமல் திருப்பி செலுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியர் உடன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர்
திருவண்ணாமலையில் இந்தியன் வங்கியின் மூலமாக ரூ. 2.60 கோடி மதிப்பில் கல்வி கடன் மற்றும் ரூ.15 இலட்சம் மதிப்பில் தொழிற்கடனுதவிக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்கள்.
திருவண்ணாமலை இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இந்தியன் வங்கி சார்பாக கல்விக்கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி வழங்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சி த்தலைவர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:
திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நாம் சேர்த்து வைக்கின்ற எத்தனை செல்வமாக இருந்தாலும், நமக்கு பயனளிக்காத போது கல்விச் செல்வம் மட்டும் எப்போதும் பயனளிக்க கூடிய வகையில் உள்ளது. இன்றையதினம் இந்தியன் வங்கி மூலம் கல்விகடன் வழங்குவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது. கல்வி என்பது ஒரு தலைமுறை மட்டுமல்ல, தொடர்ந்து வரக்கூடிய எழு தலைமுறைகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும். தன்னிடம் செல்வம் இல்லை என்ற காரணத்திற்காக கல்வியை பின் தொடர முடியாமல் போகக்கூடாது என்ற அடிப்படையில் கல்விகடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பல்வேறு நபர்கள் எங்கு சென்றாலும் படிப்பதற்கு உதவி வேண்டும் என்று கேட்கின்ற பொழுது அவர்களுக்கு கல்விகடன் வழங்குவதால் அவர்கள் வாழ்வு மட்டுமல்ல சுற்றி இருப்பவர்கள் வாழ்விலும் மாற்றம் நிகழ்கிறது. எனவே கல்வி கடன் பெறுகின்ற மாணவர்கள் கடனை தவறாமல் திருப்பி செலுத்த வேண்டும். வங்கி கடனை திருப்பி செலுத்துகின்ற பொழுதுதான் அடுத்த தலைமுறையினர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே கடனை பெற்று தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும். என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் 53 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 2.60 கோடி மதிப்பில் கல்விக்கடன் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 15 இலட்சத்திற்கான தொழில் கடன் ஆணைகளை வழங்கினார்.
இம்முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி மற்றும் வங்கிச் சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu