கருணை ஓய்வூதியத்தை வழங்க தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கோரிக்கை

கருணை ஓய்வூதியத்தை வழங்க தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கோரிக்கை
X

போராட்டத்தில் பங்கேற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள்

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கருணை ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்கள் நலச் சங்கத்தின் தலைவா் அழகிரி முன்னிலை வகித்தாா். மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஊழியா் சங்க பொதுச் செயலா் மாசிலாமணி வரவேற்றாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் யுவராஜ் போராட்டத்தை விளக்கிப் பேசினாா்.

போராட்டத்தின்போது, நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியமாக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஓய்வுக்கால பலன்களை விடுவிக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கருணை ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.

மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு மறு நிதி உதவி கடன் பெற மாநில அரசு ஏற்பாடுகள் செய்திட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் மாநில பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படாமல் உள்ளது. அதேபோன்று தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் பொதுப்பணி நிலைத்திறன் கோரிக்கைகள் மீது பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் உள்ளது . இதன் மீது பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதில், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் முத்தையன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் யூனியன் முன்னாள் பொதுச் செயலாளா் ராமச்சந்திரன், தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஊழியா் கூட்டமைப்பின் பொதுச்செயலா் உதயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai tools for education