திருவண்ணாமலையில் புதிய மேம்பாலம் திறப்பு

திருவண்ணாமலையில் புதிய மேம்பாலம் திறப்பு
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து மேம்பாலத்தை திறந்து வைத்தனர்

திருவண்ணாமலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் - தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய மேம்பாலங்களை, தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன்,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம், நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன் , மாவட்டத் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாதஸ்வரக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது


Tags

Next Story