திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
X

அமைச்சர் எ.வ. வேலு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒரு வருடத்திற்கு கொண்டாடுமாறு அமைச்சர் எ. வ. வேலு அறிக்கை

திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் , பொதுப்பணித் துறை அமைச்சருமான எ. வ. வேலு, வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழக மக்களின் இதயங்களை தன்னுடைய அன்பினால் தன் வயப்படுத்தி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் ,அவர்களின் பிறந்த நாள் விழா வரும் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி வரும் 1ஆம் தேதி ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலதிட்ட உதவிகள் வழங்குதல், கண் தானம், ரத்த தானம், செய்தல் மார்ச் 1ஆம் தேதி அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரொட்டி பழங்கள் வழங்குதல், மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சீரமைத்தல், திமுக கொடி ஏற்றுதல் மற்றும் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் நடத்துங்கள், என அன்று ஒரு நாள் மட்டும் இன்றி இந்த ஆண்டு முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாகவும் எழுச்சியாக கொண்டாட வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!