பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவு: மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறப்பட்டு இருப்பதாவது:-
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.அதில் திருவண்ணாமலை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.07 சதவீதமும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 88.28சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு அடுத்த மாதம் உடனடியாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
எனவே மாணவர்கள் எந்தவித அச்சமும் பயமும் இல்லாமல் உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர் கல்வியைத் தொடரலாம்.அனைத்து மாணவர்களின் எதிர்காலமும் செழிப்பாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனால் தவறான முடிவிற்கு ஏதும் செல்ல வேண்டாம் என்பதையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்களுக்கு தேவையற்ற குழப்பமும் பயம் ஏதும் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை ஏதும் தேவைப்பட்டாலோ மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் உதவி எண்கள் விவரம்.குழந்தைகள் உதவி மையம் 1098 , 1447
நாராயணன் மனநல ஆலோசகர். 9842981128முதன்மை கல்வி அலுவலகம் 9486437686இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu