திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு
செங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கருக்கு, எஸ்பி பவன்குமார் ரெட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கவுரவித்தார்.
கடலாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யாநந்தன் தலைமையிலான காவல்துறையினர் கடலாடி, சேத்துப்பட்டு, புதுப்பாளையம் மற்றும் ஆரணி தாலுக்கா காவல் நிலையங்களில் பதிவான பலவாறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து சொத்துகளை கைப்பற்ற உதவியாக இருந்துள்ளார்கள்.
கண்ணமங்கலம் காவல் நிலையம்
காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றியுள்ளார்கள்.
செங்கம் காவல் நிலையம்
காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியுள்ளார்கள்.
சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் தலைமை காவலர் செந்தில்குமரன் ஆகியோர் செங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தவிருக்கும் போராட்டங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே சேகரித்து எஸ்பி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு உடனுக்குடன் தெரிவித்ததின் பேரில் உயரதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருந்துள்ளனர்.
தண்டராம்பட்டு காவல் நிலையம்
காவல் ஆய்வாளர் தனலட்சுமி தண்டராம்பட்டு காவல் வடடத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் 260 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தும், 9 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், 269 வழக்குகளை நீதிமன்ற கோப்பிற்கு எடுக்க செய்தும், 254 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தில் தண்டனை வாங்கிகொடுத்தும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
செய்யாறு காவல் நிலையம்
சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல் தாஸ் தலைமையிலான காவல்துறையினர் செய்யாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரம்பாக்கம் ஏரிக்கரை அருகே சாலை ஓரமாக மயக்க நிலையில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க பெண்ணை மீட்டு காப்பகததில் ஒப்படைத்து சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்.
போளூர் காவல் நிலையம்
காவல் ஆய்வாளர் Kஜெயபிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் போளூர் காவல் நிலைய வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கவுரவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu